ஃபோர்ப்ஸ் சர்வே: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியே தொடர்ந்து முதலிடம்
டெல்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானிக்கே முதலிடம் கிடைத்திருக்கிறது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முகேஷ் அம்பானி
அண்மையில் சீன நிறுவனம் ஒன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் முகேஷ் அம்பானிதான் இந்தியாவின் முதல் பணக்காரர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகையும் முகேஷ் அம்பானியே முதலிடம் என்று தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். இருப்பினும் இவரது சொத்து மதிப்பு சற்றே குறைந்திருக்கிறது.

2வது இடத்தில் லட்சுமி மிட்டல்
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தைப் பெற்றிருப்பவர் லட்சுமி மிட்டல். ஸ்டீல் தொழிலில் கோலோச்சி வரும் லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 16 பில்லியன் டாலர்.

அஜிம் பிரேம்ஜிக்கு 3வது இடம்
விப்ரோ குழுமத்தின் தலைவரான அஜிம் பிரேம்ஜிக்கு 3-வது இடம் கிடைத்திருக்கிறது. இவரது சொத்து மதிப்பு 12.2 பில்லியன் டாலர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 800 மில்லியன் டாலர் இது குறைவாகும்.

பலோன்ஜி மிஸ்ட்ரி
கட்டுமானத் துறையில் முன்னணி வகிக்கும் பலோன்ஜி மிஸ்ட்ரி, 4-வது இந்திய பணக்காரர். இவரது சொத்து மதிப்பு 9.8 பில்லியன் டாலர்.

திலீப் சங்வி
சன் பார்மசூட்டிகல்ஸின் திலீப் சங்வி முதன் முறையாக ஃபோர்ப்ஸ் பட்டியலின் டாப் 5க்குள் நுழைந்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 9.2 பில்லியன் டாலர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் திலீப் சங்வியின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர் அதிகமாகும்.

அதி கோத்ரேஜ்
115 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோத்ரேஜ் குழுமத்தின் அதி கோத்ரேஜ் இந்தியாவின் 6-வது பணக்காரர். இவரது சொத்து மதிப்பு 9 பில்லியன் டாலர். மும்பை புறநகரில் 3,500 ஏக்கர் நிலத்தை வாங்கியிருப்பதன் மூலம் தங்களது சொத்து மதிப்பை அதிகரித்திருக்கிறது கோத்ரேஜ் குடும்பம்.

சாவித்ரி ஜிண்டால்
இந்தியாவின் 7-வது பணக்காரர் என்ற பெருமை சாவித்ரி ஜிண்டாலுக்கு கிடைத்திருக்கிறது. இவரது சொத்து மதிப்பு 8.2 பில்லியன் டாலர்.

சசி மற்றும் ரவி ரூயா
இந்தியாவின் 8வது பணக்காரர் என்ற பெருமை எஸ்ஸார் குழுமத்தின் சசி மற்றும் ரவி ரூயா இருவருக்கும் கிடைத்திருக்கிறது. இவர்களது சொத்து மதிப்பு 8.1 பில்லியன் டாலர். மொத்தம் 25 நாடுகளில் எஸ்ஸார் குழுமம் தமது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்துஜா சகோதரர்கள்
இந்துஜா குழுமத்தின் ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ் மற்றும் அசோக் ஆகியோர் இந்திய பணக்காரர்களில் 9-வது இடத்தில் இருக்கின்றனர். இவர்களது சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலர்!

10-வது இடத்தில் குமார்மங்கலம் பிர்லா
இந்திய பணக்காரர்களில் 10-வது இடத்தை 45 வயதான குமார் மங்கலம் பிர்லா பெற்றிருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 7.8 பில்லியன் டாலர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications