போலி ஆவணம் தயாரித்து நிலங்கள் விற்பனை: அதிமுக பிரமுகருக்கு வலைவீச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் தயாரித்து 100 ஏக்கர் நிலத்தை விற்ற புரோக்கரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அதிமுக பிரமுகர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் பனிச் சித்ரஹெம்ப்ரான், ஜேகேஷ் ஹெம்ப்ரான். இவர்களுக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலம் ஒட்டப்பிடாரம் அருகே கே.தளவாய்புரத்தில் உள்ளது. இதை பாளையங்கோட்டையை சேர்ந்த ரிண்டு என்பவர் நிர்வகித்து வருகிறார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு நில புரோக்கரான வடக்கு பரம்பூரை சேர்ந்த ரங்கநாத கண்ணன் என்பவரும், ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த அதிமுக ஊராட்சி செயலாளர் கெம்புமகாராஜா உள்ளிட்ட சிலரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து இந்த நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதுபோல் டெல்லி கர்னல் ரோட்டை சேர்ந்த பிசம்பீர் தயாள் மகன் உபேத் தயாள் என்பவருக்கு சொந்தமான 50.36 ஏக்கர் நிலத்தையும், மேற்கு வங்கத்தை சேர்ந்த தகட்டால்ஹரி என்பவருக்கு சொந்தமான தாளவாயபுரத்தில் உள்ள 10.7 நிலத்தையும் இந்த கும்பல் மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த 3 நிலங்களும் சென்னையில் உள்ள சகாபுதீன் என்பவரது ஷிப்பிங் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து நிலத்தின் உரிமையாளர்கள் தூத்துக்குடி மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நில புரோக்கர் ரெங்கநாத கண்ணனை கைது செய்தனர். கொம்புமகாராஜா உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications