குஜராத்தில் காங்கிரஸுக்கு தோல்விதான் ‘கிடைக்கும்’- மீண்டும் மோடியே முதல்வர்- கருத்துக் கணிப்பு

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. டிசம்பர் 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. குஜராத் முதல்வராக 4-வது முறையாக நரேந்திர மோடி ஆட்சியைப் பிடிப்பார் என்று பாஜகவினர் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியா டுடே மற்றும் ஓ.ஆர்.ஜி. ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள்:
- நரேந்திர மோடி மீண்டும் முதல்வராக 56% பேர் ஆதரவு
- மோடியின் ஆட்சிக் காலம் சிறப்பாக இருந்தது என 37% பேர் ஆதரவு
- விலைவாசி உயர்ந்துவிட்டதாக 28% பேர் ஆதரவு
- மோடியின் ஆட்சிக் காலத்தில் தொழில்வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பெருகியிருப்பதாக 67% பேர் கூறியுள்ளனர்.
- குஜராத் கலவரத்துக்கு நரேந்திரமோடிதான் பொறுப்பு என 58% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- மோடி பிரதமரானால் குஜராத் மேலும் வளர்ச்சி அடையும் என்று 60% பேர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
- ராகுல் காந்தி பிரதமராக 35% பேரும் நிதிஷ்குமாருக்கு 14% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- மோடிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி புதுக் கட்சி தொடங்கியிருக்கும் கேசுபாய் பட்டேலுக்கு மொத்தமே 2% ஆதரவுதான் இருக்கிறதாம்
- இஸ்லாமியர்களில் 61% பேர் மோடிக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications