அந்தமான் அருகே குறைந்தழுத்த தாழ்வு நிலை- மழை வருமாம்...: ரமணன் சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக ரமணன் கூறுகையில்,தென்கிழக்கு ஆப்பிரிக்கா அருகே அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. அந்த புயலுக்கு முர்ஜான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த புயல் இன்று ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா கடற்கரையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழக வளிமண்டலத்தில் எந்த தாக்கமும் இல்லை.
வடக்கு அந்தமான் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது எப்படி நகரும் என்று இப்போது எதுவும் திட்டவட்டமாக கூறமுடியாது. கணிணி உதவியுடன் செய்த கணிப்பு படி தமிழ்நாட்டில் 29-ந்தேதி முதல் மீண்டும் மழை பெய்யும். அதுவரை லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications