என் முகத்திலேயே முழிக்காதே.. விஜயகாந்த் போட்ட 'தடா'வால் தடம் மாறிய சுந்தரராஜன்!
சென்னை: மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சுந்தரராஜனுக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் போட்ட கடுமையான தடை காரணமாகவே அவர் அதிரடியாக முதல்வர் ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்து விட்டதாக கூறுகிறார்கள்.

விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர்
சுந்தரராஜன் ஆரம்ப காலத்திலிருந்தே விஜயகாந்த்துக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவரது இந்த திடீர் தாவல் தேமுதிகவினரை மட்டுமல்லாமல், விஜயகாந்த் குடும்பத்தினரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

நம்ம சுந்தரா இப்படி... விஜயகாந்த் குடும்பம் அதிர்ச்சி!
சுந்தரராஜன் இப்படிச் செய்வார் என்று தேமுதிகவினரும், விஜயகாந்த் குடும்பத்தினரும் எதிர்பார்க்கவில்லையாம். அவர் அப்செட்டாக இருப்பது விஜயகாந்த்துக்கு ஏற்கனவே தெரிந்தபோதிலும் அவரை சமாதானப்படுத்தி வைத்திருந்தாராம். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு விஜயகாந்த்தைக் கொந்தளிக்க வைத்து விட்டதாம்.

பன்னீரைப் பார்த்ததால் கொந்தளித்த விஜயகாந்த்
சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சுந்தரராஜன் வீடு தேடிப் போய்ப் பார்த்து நீண்ட நேரம் பேசினாராம்.இது விஜயகாந்த் காதுக்குப் போகவே கடும் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். உடனே சுந்தரராஜனை போனில் பிடித்த அவர், என் முகத்திலேயே முழிக்காதே, என் வீட்டுப் பக்கம் வராதே, கட்சி நிகழ்ச்சிகளுக்கும் வராதே என்று கூறி விட்டு போனை வைத்து விட்டாராம்.

திட்டக்குடி தமிழழகனும் அப்செட்டில்..
இதனால் சுந்தரராஜன் கடும் அதிருப்தி அடைந்தார். இதேபோலத்தான் திட்டக்குடி தமிழகனும் அதிருப்தியில் இருந்து வந்தார். கூட்டிக் கழித்துப் பார்த்த சுந்தரராஜன், எங்கிருந்தோ வந்த அட்வைஸின்படி முதல்வர் ஜெயலலிதாவை இன்று நேரில் போய்ப் பார்த்துப் பேசி விட்டு வந்து விட்டார்.

விரைவில் தேமுதிகவுக்கு முழுக்கு?
விரைவில் சுந்தரராஜனும், தமிழழகனும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளையும், கட்சிப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அடுத்தடுத்து அதிர்ச்சி
அடுத்து மேலும் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை தேமுதிக பார்க்கும் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications