ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 41 பேர் பலி
மைமானா : வடக்கு ஆப்கானிஸ்தானின் மைமானா நகரில் மசூதியில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பர்யாப் மாகாணத்தின் மைமானா நகரில் உள்ள மசூதி ஒன்றில், இன்று பக்ரீத் தொழுகைக்காக ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
அப்போது போலீசார் உடையில் வந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இதில் சம்பவ இடத்திலேயே 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் பொதுமக்கள், 15 பேர் போலீசார். குண்டுவெடிப்பில் இறந்தவர்களில் அம்மாகாண காவல்துறை உயர் அதிகாரி அப்துல் காலிக்கும் ஒருவர் என்று அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், அதிபர் ஹமீத் கர்சாய்க்கு எதிராக தலிபான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆப்கானிஸ்தானில் 4 நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நாளான்று மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் ஆப்கனில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications