ஜெவைச் சந்தித்தது ஏன்.. அடுத்து யார் தலைமை? - மைக்கேல் ராயப்பன், அருண்பாண்டியன் பரபர பேட்டி!
சென்னை: ஜெயலலிதாவைச் சந்திக்க எங்களுக்கு தேமுதிகவிலிருந்து யார் அனுமதியும் தேவையில்லை. அடுத்து யார் தலைமையில் சட்டசபையில் இயங்குவோம் என்பதை விரைவில் முடிவு செய்வோம், என தேமுதிக எம்எல்ஏக்கள் மைக்கேல் ராயப்பனும், அருண் பாண்டியனும் இன்று தெரிவித்தனர்.
மைக்கேல் ராயப்பன், அருண்பாண்டியன், இருவரும் இன்று தலைமை செயலகத்துக்கு வந்தபோது, அவர்களது காரில் வழக்கமாக பறக்கும் தே.மு.தி.க. கொடி இல்லை. காரில் பொருத்தப்பட்டிருந்த அந்த கொடிகள் அகற்றப்பட்டிருந்தது.

முதல்வரைச் சந்தித்தது எதற்காக?
அருண்பாண்டியன்: எங்களை தேர்ந்து எடுத்து 1 ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. பேராவூரணி மக்கள் எங்களுக்கு, இவ்வளவு நல்ல வாய்ப்பு கொடுத்ததற்கு கண்டிப்பாக துரோகம் செய்யக் கூடாது. நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் இந்த நடவடிக்கை.
அம்மா அவர்களை நேரடியாக பார்த்து எங்களது தொகுதி பிரச்சினைகளை கூறினோம். ஒவ்வொரு பிரச்சினையையும் சொன்னோம். எங்கள் தொகுதியில் ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. இந்த மாதிரி நிறைய பிரச்சினைகள் உள்ளது. தொகுதியில் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களது பிரச்சினை எனக்கு நன்றாக தெரியும்.
அந்த ஊருக்கு அதிகமாக நான் செல்லவில்லை. ஆனால் மொத்த தொகுதியையும் டிஜிட்டலைசேசன் செய்து என் கையில் வைத்துள்ளேன். ஒரு ஊசி நூலில் இருந்து மலை வரைக்கும் தொகுதி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். பிரச்சினைகள் நிறைய உள்ளன.
முதல்வர் அம்மா அவர்கள் நிறைய திட்டங்கள் வைத்துள்ளார்கள். அந்த திட்டங்கள் எங்கள் தொகுதி மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும். இப்போதைக்கு பேராவூரணி தொகுதி மேம்பாடு தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை. அதற்காகத்தான் முதல்வர் அம்மாவை பார்க்க வந்தோம். அம்மா செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு வந்து சேர வேண்டும்.
இந்த ஒரே காரணத்துக்காகத்தான் அம்மாவை நேரடியாக பார்த்து மனுவை கொடுத்துள்ளோம்.
மைக்கேல் ராயப்பன்: என்னுடைய தொகுதி மக்களுக்கு நிறைய தேவைகள் கோரிக்கைகள் இருக்கிறது. ஏற்கனவே சட்டசபையில் இது பற்றி நான் பல தடவை பேசியுள்ளேன். அவை நிறை வேற்றப்படவில்லை. அம்மா அவர்கள் ஏழை- எளிய மக்களுக்காக நிறைய திட்டங்களை அறிவித்து நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறார்.
எனவே என்னுடைய தொகுதிக்கும் இது மாதிரி மக்களுக்கு தேவைப்படுகிற திட்டங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். அதை கனிவோடு நிறைவேற்றி தருவதாக அம்மா கூறி உள்ளார்கள். கண்டிப்பாக எனது தொகுதிக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகிறேன்.
ஒரு ஆண்டுக்கு மேல் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது சந்தித்தது ஏன்?
மைக்கேல் ராயப்பன்: இத்தனை நாளும் அதற்கு நிறைய முட்டுக்கட்டைகள் இருந்தன. இன்றைக்குத்தான் அம்மாவிடம் கோரிக்கைகள் சென்று சேர்ந்துள்ளன. இதற்கு முன்பு அதிகாரிகள் கூட எங்கள் கோரிக்கைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம்.
முதல்வர் சந்திக்க உங்கள் கட்சி தலைவர் விஜயகாந்திடம் அனுமதி பெற்று வந்தீர்களா?
மக்கள் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளை வைக்க யாருடைய ஒப்புதலும் பெற தேவை இல்லை. தேமுதிக தலைமையிடம் இதற்கெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை. எம்எல்ஏக்கள் என்ற முறையில் எங்களுக்கே அதற்கான உரிமை உள்ளது.
சட்டசபையில் இனி உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும்?
மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை சட்டசபையில் வைத்து அதை நிறைவேற்றி தர வேண்டும் என்று அம்மாவை வலியுறுத்தும் வகையில் இருக்கும்.
நேற்று 2 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்வரைச் சந்தித்தார்கள். இன்று நீங்கள் 2 பேர் வந்திருக்கிறீர்கள். உங்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா?
என்னுடைய தொகுதி கோரிக்கையை கொடுக்கத்தான் முதல்வர் அம்மாவை பார்த்தேன். நேற்று நடந்த சந்திப்புக்கு நான் பதில் சொல்ல இயலாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய நாங்கள் அம்மாவை சந்தித்துள்ளோம். இதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எனவே எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.
உங்கள் கட்சித் தலைவர் முதல்வரை கடுமையாக விமர்சித்துப் பேசிவரும் நிலையில், நீங்கள் முதல்வரைச் சந்தித்து, பாராட்டு தெரிவித்துள்ளீர்களே?
இதற்கு இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை. இது தொகுதி மக்கள் பிரச்சினை. அரசியல் பிரச்சினையல்ல.
சட்டசபையில் இனி யார் தலைமையின் கீழ் செயல்படுவீர்கள்?
இது பற்றி பிறகு பேசிக் கொள்வோம். இப்போதைக்கு தொகுதி மக்கள் கோரிக்கையை வைத்துள்ளோம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications