'தேமுதிக (ஜெ)' அணியின் நால்வர்.. ஒரு குட்டி பயோடேட்டா!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆட்சியைப் புகழ்ந்து பேசி விஜயகாந்த்தின் கோபத்துக்குள்ளாகியுள்ள நான்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் குறித்த ஒரு குட்டி பயோடேட்டா...

சுந்தரராஜன்
மதுரையில் பிறந்தவர். 10வது வகுப்பு வரை படித்துள்ளார். திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். விஜயகாந்த்தின் ஆரம்ப கால நண்பர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக உடன் இருந்தவர். இப்ராஹிம் ராவுத்தர், சுந்தரராஜன் உள்ளிட்டோர்தான் ஒருகாலத்தில் விஜயகாந்த்துக்கு மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். ஜோதிடத்திலும் நல்ல புலமை உண்டு இவருக்கு.
விஜயகாந்த் அரசியல் பிரவேசம் மேற்கொண்டபோது கூடவே இவருக்கும் முக்கியப் பொறுப்புகொடுத்து, மதுரை மத்திய தொகுதியிலும் வேட்பாளராக நிறுத்தினார். மதுரை மத்திய தொகுதிக்குள்தான் விஜயகாந்த்தின் வீடு உள்ளது என்பதால் சுந்தரராஜனின் வெற்றியை தனது வெற்றியாக கருதி தீவிரப் பிரசாரம் செய்தவர் விஜயகாந்த் என்பது நினைவிருக்கலாம்.

நடிகர் அருண் பாண்டியன்
விஜயகாந்த்தின் நீண்ட கால திரையுலக நண்பர் அருண் பாண்டியன். ஊமை விழிகள் படத்திலிருந்து இவர்களது நட்பு பலமாக இருந்து வந்தது. விஜயகாந்த் மீது தீவிர அன்பும், நட்பும் பாராட்டி வந்தவர் அருண் பாண்டியன். அவர் தயாரித்து இயக்கிய ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து உதவியவர் விஜயகாந்த்.
திரையுலக நட்பு மற்றும் தனிப்பட்ட பிரியம் காரணமாக அருண் பாண்டியனை அவருக்குச் சம்பந்தமே இல்லாத பேராவூரணி தொகுதியில் நிற்க வைத்து தனது செல்வாக்கின் மூலமாக வெற்றி பெற வைத்தவர் விஜயகாந்த். இவர் விலகிப் போனதுதான் விஜயகாந்த்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அருண் பாண்டியன் பிறந்தது பாளையங்கோட்டை, முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பி.ஏ. வரை படித்துள்ளார். திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

மைக்கேல் ராயப்பன்
பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டிருந்தவர் மைக்கேல் ராயப்பன். திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். விஜயகாந்த்தின் கட்சி் செலவுக்கு நிறையவே பண உதவி செய்தவர் என்று கூறுகிறார்கள். பிளஸ்டூ வரை படித்துள்ள இவர் ராதாபுரம் தொகுதியி்ல நிறுத்தப்பட்டு வென்றவர். விஜயகாந்த் என்ற வெளிச்சத்தில் பட்டு வெளியுலகுக்குத் தெரிய வந்தவர் மைக்கேல் ராயப்பன்.

தமிழழகன்
விஜயகாந்த்தின் தீவிர ரசிகர். அடிப்படையில் விவசாயியான இவர் விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது அதில் இணைந்து கொண்டு செயல்பட்டவர். சொந்த ஊரான நல்லூர் பஞ்சாயத்து யூனியனின் துணைத் தலைவராக இருந்தவர். திட்டக்குடி எம்.எல்.ஏவாக இருக்கிறார். 10வது வகுப்பு வரை படித்தவரான இவர் அரசியலுக்கும் புதுமுகம், சட்டசபைக்கும் புதுமுகம் ஆவார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications