விஜயகாந்த், தேமுதிக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை கோரி கமிஷனரிடம் பத்திரிக்கையாளர்கள் புகார்

நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்த்திடம் ஜெயா டிவி செய்தியாளர் பாலு, தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கேட்டபோது அவரை மரியாதைக்குறைவாக பேசி அநாகரீகமாக நடந்து கொண்டார் விஜயகாந்த். மதுரைக்கு வந்து பார் என்றும், அடிக்க கை ஓங்கியும் மோசமாக நடந்து கொண்டார்.
மேலும் செய்தியாளர்களையும் நாயே நாயே என்றும் திட்டினார். இந்த சம்பவத்தால் பத்திரிக்கையாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
பாலுவை தேமுதிகவின் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கீழே பிடித்துத் தள்ளி விட்டார். இதனால் மேலும் பரபரப்பு கூடியது. இந்த விவகாரம் குறித்து பாலு சார்பில் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் அதுகுறித்து ஒப்புகை ரசீதை மட்டும் வழங்கியுள்ளனர். ஆனால் புகாரை இதுவரை பதிவு செய்யவில்லை.
இதையடுத்து இன்று பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் தரப்பட்டது. அதில், விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட விஜயகாந்த் மீதும், நிருபர் பாலுவை தாக்கிய அனகை முருகேசன் எம்.எல்.ஏ. மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications