ரயில் கட்டணத்தை உயர்த்த யோசிக்கமாட்டோம்.. மிரட்டும் புதிய ரயில்வே அமைச்சர் பன்சால்
Subscribe to Oneindia Tamil

திரிணாமுல் காங்கிரஸ் வசம் இருந்து வந்த ரயில்வே துறை தற்போதைய அமைச்சரவை மாற்றத்தின்போது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. புதிய ரயில்வே அமைச்சராக பவன்குமார் பன்சால் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பவன்குமார் பன்சால், தேவை எனில் ரயில் கட்டணத்தை உயர்த்துவது பற்றி கவலைப்பட மாட்டோம் என்றார். அப்படியான ஒரு கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் பொதுமக்களும் அதை ஏற்றுக் கொள்வர் என்று கூறிய பன்சால், கட்டணத்தை உயர்த்தும் போது சேவைகளையும் அதிகரிப்போம் என்றார்.
மேலும் ரயில்வே துறை எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களை நன்கு அறிந்திருக்கிறேன் என்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications