கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடலில் மீண்டும் மனித சங்கிலி போராட்டம்
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் சென்னையில் நடைபெற்ற நிலையில் அதே நேரத்தில் கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் கடற்பரப்பில் பிரம்மாண்ட மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கடலுக்குள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைக்கு அருகேயும் போராட்டம் நடத்தப்பட்டது. கூத்தங்குழியில் சுப. உதயகுமார் கடலில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications