கோவை: 2 சிறார்களை பலாத்காரம் செய்து கொலை செய்த மனோகரன் குற்றவாளி- நவ. 1-ல் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Mushkin
கோயம்புத்தூர்: தமிழகத்தை உலுக்கிய கோவை பள்ளிக் குழந்தைகள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோகரனை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. குற்றவாளி மனோகரனுக்கான தண்டனை விவரம் நவம்பர் 1-ந் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அனேகமாக மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.

சிறுவர்கள் கொலை

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் சிறுவன் ரித்திக் ஆகியோரை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவன் கடத்தி படுகொலை செய்தான். இக்கொலை வழக்கில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் போலீசிடம் சிக்கிய மோகன்ராஜ் தப்பியோட முயன்றதால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான்.

வழக்கு விவரம்

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் மொத்தம் 46 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் 9 பேரிடம் மறு குறுக்கு விசாரணை நடைபெற்றது. எதிர்தரப்பில் 6 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அரசு தரப்பு வாதம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் எதிர்தரப்பு வாதம் கடந்த 22-ந் தேதி நடைபெற்றது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கர நாராயணன் வாதாடினார். மனோகரன் தரப்பில் இலவச சட்ட உதவி மையம் மூலம் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சர்மிளா ஆஜரானார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்

இன்று காலை கோவை மகளிர் நீதிமன்றத்தில், மனோகரன் ஆஜர்படுத்தப்பட்டான். அவன் மீதான கடத்தல், கற்பழிப்பு, கொலை, தடையங்களை மறைத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சாட்சியங்கள் அனைத்தும் மனோகரன் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் அறிவித்தார். அதற்கு மனோகரன் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால் நீதிபதி சுப்பிரமணியம், மனோகரனைக் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியதோடு, வரும் 1-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதே நாளில்....

2 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது இதே அக்டோபர் 29-ந் தேதிதான்! அதே நாளிலேயே தீ்ர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூக்கு தண்டனை?

இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த குழந்தைகளின் தரப்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணன்,
இதுபோன்று சிறு பெண் குழந்தைகளை, எதிர்த்து போராடக்கூடிய வழியில்லாத குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வது என்பது, மிகக்கொடுரமானது. இதுபோன்ற வழக்குகளில் முன் உதாரணமான தீர்ப்புகள் உச்சநீதிமன்றத்தில் வந்துள்ளன. அந்த தீர்ப்புகளின் படி பார்த்தால் மனோகரனுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+