நரேந்திர மோடி - சசிதரூர் மோதல் ஏன்?
டெல்லி: மனைவி அமையும் நேரம் ஒரு சிலருக்கு லக் அடிக்கும் என்பார்கள். ஆனால் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு மனைவியை வைத்துதான் சர்ச்சையே. தோழியாக இருந்தபோதே அமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்தவர் சுனந்தா. மனைவியான பின்னரும் அவர் தரூருக்கு சர்ச்சையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அமைச்சர் பதவிக்கு வேட்டு
காங்கிரஸ் அரசு 2வது முறையாக பதவி ஏற்றபோது சசிதரூருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கான லக் அடித்தது. ஆனால் ஐபிஎல் கொச்சி அணியில் தன்னுடைய தோழி சுனந்தாவுக்கு 70 கோடி மதிப்புள்ள பங்குகளை பெற்றுத்தர தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து 2010ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார்.

சில மாதங்களில் திருமணம்...
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனந்தா. ஐ.பி.எல் சர்ச்சைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய தரூர் சில மாதங்களில் தனது தோழி சுனந்தாவை திருமணம் செய்தார். இதுவே பெரும் சர்ச்சையை எழுப்பியது.

சுனந்தாவின் மறுபெயர் சர்ச்சையா?
கால ஓட்டத்தில் சசிதரூருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கவே அந்த சந்தோசத்தை கொண்டாட சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊரான திருவனந்தபுரம் வந்திருக்கிறார். வந்த இடத்தில் யாரோ சுனந்தாவிடம் சில்மிஷம் செய்த அவரது கன்னத்தில் பளார் விட்டார் சுனந்தா.

ரூ. 50 கோடி காதலி ..மோடியின் கிண்டல்
இப்பொழுது குஜராத், இமாச்சல்பிரதேசத்தில் சட்டமன்றத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. பிரசாரத்தில் பேசிய மோடி, தரூரின் மனைவியைப் பற்றி கிண்டல் செய்துள்ளார். ரூ.50 கோடி கேர்ள்ப்ரெண்ட் என்று சுனந்தாவைப் பற்றி மோடி கூறவே பற்றிக்கொண்டது சர்ச்சை.

விலைமதிப்பில்லாத பெண்ணாக்கும்..தரூர் பதிலடி
ஆனால் மோடியின் இந்த கிண்டலுக்கு பதிலளித்துள்ள சசிதரூர் என்னுடைய மனைவி ரூ. 50 கோடிக்கும் மேல் மதிப்புடையவர். அவர் ஒரு விலைமதிப்பற்ற பெண் என தெரிவித்துள்ளார்.

காதலித்தால் தெரியும் அருமை...
டிவிட்டரில் மோடியை காட்டமாக விமர்ச்சித்துள்ள சசிதரூர், மோடி காதல் வயப்படவேண்டும். அப்பொழுதுதான் காதலின் அருமை அவருக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். சசிதரூரின் இந்த பதில், டுவிட்டர் இணையதளத்தில் இருவரின் ஆதரவாளர்களிடையே கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இந்த கொலை வெறி?
எத்தனையோ அமைச்சர்கள் இருக்கையில் சசிதரூரை மட்டும் மோடி குறிவைத்தது ஏன் என்பதுதான் பலரின் கேள்வி. இதற்கு காரணம் டிவிட்டர்தானாம்.

மோடி – தரூர் டிவிட்டர் போர்
சமீபத்தில் மோடியின் ட்விட்டர் கணக்கில் 10 லட்சம் பேர் அவரை பின் தொடர்வதற்காக மோடி தனக்கு தானே வாழ்த்து சொன்னார். ஆனால் அதில் பெரும்பான்மையானவை போலி கணக்குகள் என்ற தகவல் வெளியானவுடன் சசி தரூர் தன் ட்விட்டர் கணக்கில் மோடியை கிண்டல் செய்திருந்தார். அதற்குத்தான் இந்த பதிலடியாம்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications