மின்வெட்டிற்கு திமுகவே காரணம் ஜெ. குற்றச்சாட்டு: திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனைக்கு, முந்தைய தி.மு.க அரசே காரணம் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தமது ஆட்சி காலத்தில் போடப்பட்ட மின்திட்ட ஒப்பந்தங்களை, தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை என்றும் அவர் புகார் கூறியுள்ளார். மின் தட்டுப்பாடு பிரச்சினை 2013ம் ஆண்டிற்குள் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு செயல்படுத்தி வரும் மின்திட்டங்கள் மூலம் வரும் 2013ம் ஆண்டு இறுதிக்குள் 4300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னைக்கு கடந்த தி.மு.க., ஆட்சியும், மத்திய அரசுமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
வல்லூர், வடசென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டு வரும் மின் திட்டங்கள் செயல்படத்துவங்கும் போது மின் பிரச்னை குறையத் துவங்கும் என்று தெரிவித்த அவர், கூடங்குளத்தில் 925 மெகாவாட் மற்றும் நெய்வேலி அனல் மின் நிலையம் மூ,லம் 230 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் போது, தமிழகத்தின் மின்பற்றாக்குறை முழுமையாக தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
மத்திய அரசு தவறிவிட்டது
கக்குறைந்த அளவே மின்சார உற்பத்திக்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டதாகவும், மத்திய அரசும் தமிழகத்தின் மின் பிரச்னையை தீர்க்க தவறி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கவுள்ள 1721 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்காக சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுக வெளியேற்றம்
முன்னதாக அவையை ஒத்திவைத்து மின்வெட்டு பற்றி பேச கூறியதால் திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றபட்டனர் . பிரச்சனை பற்றி பேச துரைமுருகனுக்கு அனுமதிவழங்கினார் சபாநாயகர் தனபால். ஆனால் கூட்டத்தை முழுமையாக ஒத்திவைத்து விவாதிக்க கூறியதால் தி.மு.க, அ.தி.மு.கவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. தி.மு.கவினர் எழுந்து நின்று விவாதம் செய்ததால் கூண்டோடு வெளியேற்றபட்டனர்.












Click it and Unblock the Notifications