நிலம் புயலை சந்திக்க தமிழ்நாடு தயார்... 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிலம் புயல் இன்று பிற்பகலுக்கு மேல் சென்னை - நெல்லூர் இடையே கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னையையும் குறி வைக்கக் கூடும் என்ற அச்சமும் உள்ளது.
இந்த புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.
இதையடுத்து புயல் காரணமாகவும், பலத்த மழை காரணமாகவும் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டனம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, சேலம், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுவையிலும் விடுமுறை
இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புயல் மற்றும் தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சந்திக்க அனைத்து மாவட்ட நிர்வாகமும் ஆயத்த நிலையி்ல் வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்ட பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் விடுமுறை அறிவித்துள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications