சென்னைக்கு 'அந்தாண்டை' 180 கி.மீ நகர்ந்து போய் விட்டது நிலம்!

பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்ட நிலம் புயல் நேற்று பெரியஅளவில் சேதாரத்தை ஏற்படுத்தாமல் பத்திரமாக மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்து விட்டது. நேற்று மாலை அது நாலரை மணிவாக்கில் கரையைக் கடந்தபோது பலத்த சூறாவளிக் காற்று சுழற்றியடித்தது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்றால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். கடலிலும் கடும் சீற்றம் காணப்பட்டது. கடலில் அலைகள் 10 அடி உயரத்திற்கு எழுந்து வந்தன. இதனால் கடற் பகுதியில் பலத்த முன்னெச்சரிக்கையாக மக்களை போலீஸார் அனுமதிக்கவில்லை.
மகாபலிபுரம் பகுதியில் புயல் கரையைக் கடந்த போது மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சில மணி நேரங்கள் இந்த மழை நீடித்தது. நேற்று மட்டும் அப்பகுதியில் 220 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.
புயல் பின்னர் கரையைக் கடந்து வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றது.
தற்போது நிலம் புயல், சென்னைக்கு வடமேற்கே 180 கி.மீ தொலைவில் கர்நாடகம் மற்றும் ஆந்திர எல்லையில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்திற்கு ஆபத்து முற்றிலுமாக நீங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் தற்போது மழை அவ்வளவாக இல்லை. சில இடங்களில் தூறல் காணப்பட்டது. மற்றபடி வானம் மேகமூட்டமாக மட்டுமே உள்ளது.
நேற்று கடலூரில் அதிகபட்சமாக 70 மில்லிமீட்டர் மழை பெய்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications