காங்கிரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை ஓயமாட்டோம்: கெஜ்ரிவால் சபதம்

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் தொகுதியான ஃபரூக்காபாத்தில் நேற்று குர்ஷித்தின் அறக்கட்டளைகளை முறைகேடுகளை அம்பலப்படுத்தி பேசினார் கெஜ்ரிவால்.
அப்போது பேசிய அவர், கடந்த அக்டோபர் 2-ந் தேதி கட்சி தொடங்கியது முதல் எங்களுக்கு உறக்கம் என்பது இல்லை. நாங்கள் கட்சி தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தினோம். நீங்கள் ஒரு கட்சி நடத்தி அதன் மூலம் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றனர். நாங்கள் அரசியலில் அவர்களுக்கு நிச்சயம் பாடம் கற்பிப்போம். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடியும்வரை காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும்வரை ஓயப் போவதில்லை என்றார் அவர்.
ஃபரூக்காபாத்தில் கெஜ்ரிவால் கூட்டத்தில் சல்மான் குர்ஷித் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். முன்னதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கெஜ்ரிவாலுக்கு கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications