சுந்தரராஜனுக்கு முன்னாடி வேஷ்டியை 'கழற்றியவர்கள்' யார்னு தெரியுமா?
சென்னை: தேமுதிக ஜெ. அணிக்கு மாறி விட்ட சுந்தரராஜன் எம்.எல்.ஏ. தனது கட்சி வேஷ்டியையும் தூக்கிப் போட்டு விட்டார். ஆனால் அவருக்கு முன்பாக வேறு சிலரும் இதே பாணியில், ஆனால் வேறு பல காரணங்களுக்காக டிரஸ்ஸை மாற்றிய வரலாறு சட்டசபைக்கு உண்டு.

வேஷ்டியைப் பறித்ததால் பேண்ட்டுக்குத் தாவிய பரிதி
ஒரு சின்னப் பிரச்சினைக்காக வேஷ்டியைக் கழற்றிய முதல் தலைவர் பரிதி இளம்வழுதிதான். வேறு ஒன்றும் இல்லை, சட்டசபையில் அவரது வேஷ்டியை ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த சிலர் பறித்துப் பகிரங்கப்படுத்த முயன்றதால் தனது வேஷ்டியைக் கழற்ற வேண்டியதாயிற்று பரிதி.

கருணாநிதி விலகினார், மாட்டிக் கொண்டார் பரிதி
1991 சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் பரிதி. இதில் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்து விட பரிதி மட்டும் மாட்டிக் கொண்டார். சட்டசபை கலாட்டாவில் அவரது வேஷ்டியை அதிமுகவினர் பறிக்க அடுத்த நாளே பேண்ட்டுக்கு மாறி விட்டார்.

அருண் பாண்டியன் கூட மாறி மாறி
தேமுதிகவைச் சேர்ந்தவரான நடிகர் அருண் பாண்டியன் கூட டிரஸ்ஸை அடிக்கடி மாற்றும் வழக்கம் கொண்டவர். ஒரு நாளைக்கு வேஷ்டி சட்டையில் வருவார், அடுத்த நாள் பேண்டுக்கு மாறி விடுவார். அதிலும் ஒரு நாள் இன் பண்ணிக் கொண்டு வருவார், அடுத்த நாள் சும்மா வருவார்.

கலர் கலராக டிரஸ் போட்ட எஸ்.வி.சேகர்
காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் சட்டசபை உறுப்பினராக இருந்தபோது யூனிபார்ம் போல வேஷ்டி, சட்டை போட்டுக் கொண்டு வந்ததில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் அவர் வேஷ்டி, சட்டை போட்டதாகவே நினைவில்லை. மாறாக, எப்போதுமே பேண்ட், சட்டைதான். அதிலும் கலர் கலராக டிரஸ் போடுவார்.

ஆந்திரா, கர்நாடகத்தில் 'ஆல்வேஸ்' பேண்ட்தான்!
நம்ம ஊரில்தான் இப்படி வேஷ்டி, கதர்ச் சட்டை. ஆனால் ஆந்திரா, கர்நாடகத்தில் பெரும்பாலான அரசியல்வாதிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் எப்பப் பார்த்தாலும் பேண்ட், சட்டைதான். பைஜாமா குர்தாதான். கூடவே வெள்ளை செருப்பு. வேஷ்டியைப் பார்ப்பதே அரிது.












Click it and Unblock the Notifications