சென்னைக்கு மேலும் 2 கூடுதல் கமிஷனர்கள்-19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சென்னை சட்ட ஒழுங்கு பிரிவிற்கு 2 கூடுதல் கமிஷனர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு பணி மாற்றம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.ராஜகோபால் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் பி.தாமரைக்கண்ணன், (புதிதாக உருவாக்கப்பட்டுள்ள) வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு இணை கமிஷனர் கே.சங்கர், வடசென்னை இணை கமிஷனராகவும், பயிற்சிக்கு சென்று இருந்த இணை கமிஷனர் ஆர்.எஸ்.நல்லசிவம், சென்னை மாநகர போலீஸ் தலைமையக இணை கமிஷனராகவும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. கே.சண்முகவேல், மேற்கு சென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும், வடசென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் என்.கே.செந்தாமரைகண்ணன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் சரகம் (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு) டி.ஐ.ஜி. ஆர்.திருஞானம், தென்சென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும், தென்சென்னை இணை கமிஷனர் கே.பி.சண்முகராஜேஸ்வரன், திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாகவும், சென்னை மாநகர போலீஸ் தலைமையக இணை கமிஷனர் கே.என்.சத்தியமூர்த்தி, காஞ்சிபுரம் சரக (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு) டி.ஐ.ஜி.யாகவும், ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. டாக்டர் ஆர்.தினகரன், தென்சென்னை போக்குவரத்து பிரிவு இணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தி.நகர் துணை கமிஷனர் ஆர்.சிவகுமார், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.சரவணன், பரங்கிமலை துணை கமிஷனராகவும், பரங்கிமலை துணை கமிஷனர் ஏ.சரவணன், சென்னை மாநகர போலீஸ் நிர்வாகப்பிரிவு துணை கமிஷனராகவும், தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏ.கே.கிரி, திருவல்லிக்கேணி துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.ஜெயசந்திரன், மைலாப்பூர் துணை கமிஷனராகவும், மைலாப்பூர் துணை கமிஷனர் டி.கே.புகழேந்தி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.பகலவன், தி.நகர் துணை கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஏ.ராதிகா, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பூக்கடை துணை கமிஷனர் டி.எஸ்.அன்பு, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனர் நிர்மல்குமார் ஜோஷி, பூக்கடை துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications