ஜெர்மன் பெண் மர்மநபரால் கற்பழிப்பு: போலீஸ் விசாரணை
மும்பை: மும்பையில் வசித்து வரும் ஜெர்மனியைச் சேர்ந்த இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பந்தரா நகரின் மேற்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஜெர்மனியை சேர்ந்த 27 வயது பெண் வசித்து வருகிறார். இசைத்துறையைச் சேர்ந்த அந்த பெண் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தாக தெரிகிறது. அந்த நபர் கத்தி முனையில் அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த நபர் அங்கிருந்த கேமரா, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
இதனையடுத்து அந்தப் பெண் பந்த்ரா காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications