போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற உதவும் கும்பல் கைது-தலைமறைவாக செயல்படும் கும்பல்களுக்கு வலை!
திருச்சி: போலி ஆவணங்களை பயன்படுத்தி நீதிமன்றங்களில் ஜாமீன் பெற உதவும் திருச்சியை சேர்ந்த ஒரு கும்பலை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பெயரில் தலைமறைவாக செயல்பட்டு வரும் மோசடி கும்பல்களை கைது செய்த திருச்சி போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
திருச்சி நடுவண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் ஈஸ்வரி(33). திருட்டு வழக்கில் கைதான இவர், ஜாமீனில் விடுதலையானார். ஆனால் இவர் ஜாமீன் கிடைப்பதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து சமர்ப்பித்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து ஈஸ்வரியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில், குற்றவாளிகளை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக போலியான நில உறுதி பத்திரம் (பட்டா), வருமானம் மற்றும் இருப்பிட சான்றுகள், அவற்றை தயாரிக்க பயன்படுத்திய 65 போலி அரசு முத்திரைகள், போலி குடும்ப அட்டைகள், போலி வீட்டு வரிச் சீட்டுகள் உள்ளிட்ட 3,200க்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள் சிக்கியது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரிகள், ஈஸ்வரியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் புத்தூர் நடுவண்ணாரைப்பேட்டையை சேர்ந்த குறைசாபேகம்(55) என்பவருக்கும், இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குறைசாபேகம், அவரது மகன் முகமதுகனி(32), தங்கை மகன் சாகுல் அமீது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். குறைசாபேகத்திடம் நடத்திய விசாரணையில், தங்களை போல திருச்சியில் 5 மோசடி கும்பல் செயல்பட்டு வருவதாகவும், திருச்சி மட்டுமின்றி பிற நகரங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற அவர்கள் தயாரித்த ஆவணங்களை அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தமிழகம் முழுக்க பரவியுள்ள இந்த மோசடி கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications