அண்ணியுடன் மாட்டுக் கொட்டகையில் உல்லாசம்.. பார்த்த மனைவியை கொன்ற கணவர்
பெரம்பலூர்: அண்ணன் மனைவியுடன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் உல்லாசமாக இருந்தார் வாலிபர். அதை அவரது மனைவி நேரில் பார்த்து விட்டதால் கோபமடைந்து அவரும்,அண்ணியும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்று விட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ககல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். 30 வயதான இவரது மனைவி பெயர் தங்கமணி. கண்ணன் அவரது அண்ணன் ஜெயராமன், அண்ணி சத்யா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

கண்ணனுக்கும், சத்யாவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தங்கமணிக்குத் தெரியவரவே அவர் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு வெடித்தது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தங்கமணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து ஜெயராமன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு கண்ணன், சத்யா மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து தீவிரமாக விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டது.
இதுகுறித்து போலீஸாரிடம் கண்ணன் கொடுத்த வாக்குமூ்லத்தில், சம்பவத்தன்று இரவு நானும், எனது அண்ணன் மனைவியும் வீட்டுக்குப் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் உல்லாசமாக இருந்தோம். அப்போது எனது மனைவி அங்கு வந்து விட்டார். எங்களைப் பார்த்த அவர் கோபத்தில் கத்தினார். வீட்டில் உள்ளவர்களிடம் எங்களது தகாத உறவைச் சொல்லப் போவதாக கூறினார்.
இதனால் கோபமடைந்த நானும், எனது அண்ணியும் சேர்ந்து தங்கமணியின் கழுத்தைப் பிடித்து நெரித்தோம். அதில் அவர் இறந்து விட்டார். பின்னர் நானும் எனது அண்ணியும் சேர்ந்து தங்கமணி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்து விட்டோம் என்றார்.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications