ஒபாமாவுக்கு கை கொடுக்கும் ‘இந்திய அவுட்சோர்சிங் எதிர்ப்பு’ முழக்கம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு கை கொடுக்கப் போகும் முக்கிய முழக்கங்களில் ‘இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் கொடுக்கக் கூடாது'என்பதுதான் முதன்மையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இன்றைய அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவும் ராம்னியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். அதிபர் தேர்தல் களை கட்டத் தொடங்கியது முதலே இந்தியாவுக்கு அவுட்சோர்சிங்கை கொடுத்தவரே ராம்னிதான் என்று ஒபாமா தரப்பில் புகார் வாசிக்கப்பட்டது. இது தொடர்பான விளம்பரங்கள் ஒபாமாவுக்கு கை கொடுத்திருக்கிறதாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கக் கூடிய மாகாணமான ஓஹியோவில் ஒபாமாவின் இந்த முழக்கத்துக்கு அமோக ஆதரவாம்!
தொழில்துறையின் எதிர்பார்ப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவோ, ராம்னியோ வென்றாலும் சில பொருளாதாரத் துறை சவால்களுக்கு முகம் கொடுத்தாக வேண்டிய நிலை இருக்கின்றது என்கின்றனர் தொழில்துறையினர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த பொருளாதார வல்லுநர் கேரி ஸ்கலாஸ்பெர்க், சர்வதேச பொருளாதார மந்த நிலையானது அமெரிக்காவின் ஏற்றுமதி வர்த்தகத்தை கடுமையாகப் பாதித்திருக்கிறது. யார் அதிபராக வந்தாலும் தொழில்துறை நலன் சார்ந்த கொள்கை முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்கிறார்.
அமெரிக்க தொழில் வர்த்தக சபையின் பொருளாத வல்லுநரான மார்ட்டின் ரெகலியாவோ, அமெரிக்கா தற்போது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து தீர்வு காணக் கூடிய அரசு நிர்வாகமே தற்போதைய அவசியம் என்கிறார்.
மற்றொரு பொருளாதார ஆய்வாளரான பெளல் டெலெஸ், ஒபாமாவைப் பொறுத்தவரையில் அவர் பொறுப்பேற்றால் தமது முதலாவது ஆட்சிக் காலத்தில் இருந்து பாடங்களைக் கற்றாக வேண்டும். ராம்னியைப் பொறுத்தவரையில் வரிகளை கணிசமாகக் குறைக்கும் போது பொருளாதார நிலைமை மோசமடையக் கூடும் என்பதை கவனத்தில் கொண்டாக வேண்டும். பொதுவாக தேர்தலில் வெற்றி பெறுபவர் யாராக இருந்தாலும் நாட்டின் வேலை வாய்ப்பின்மை விகிதத்தை கணிசமாகக் குறைத்தாக வேண்டும், இதற்கு நிச்சயம் முன்னுரிமை கொடுத்தாக வெண்டும் என்கிறார்.
இதேபோல் கருத்து தெரிவித்திருக்கும் பொருளாதார ஆய்வாளர் லெனா கொமிலெவ, 1936-ம் ஆண்டு ரூஸ்வெல்டு தேர்வானதற்கு பிறகு அமெரிக்க பொருளாதார மேம்பாடுக்கு வலுவான ஒரு தலைமையும் தெளிவான பொருளாதார கொள்கையும் கொண்ட ஒரு தலைவர் உருவாகவில்லை என்கிறார். இதேபோல் வருவாய் ஈட்டக் கூடிய முதலீட்டைப் பெருக்க வேண்டியதும் அவசியமானது என்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications