அதிபர் தேர்தல் ஸ்பெஷல்: முன்வாக்குப் பதிவில் ஒபாமா முண்ணனி!

அவற்றில், ஒபாமா முண்ணனி வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடித்தட்டு, நடுத்தர மக்களே, முன் வாக்குப்பதிவுகளில் அதிகம் கலந்துகொள்வதால் இது எதிர்பார்த்த செய்தியாகத்தான் இருக்கிறது.
2000 ம் வருட தேர்தலில் ஃப்ளோரிடாவில் வெறும் 547 வாக்குகள் அதிகமாக பெற்று ஜார்ஜ் புஷ் அதிபர் பதவியை கைப்பற்றினார். தற்போதைய முன் வாக்குப்பதிவில் ஃப்ளோரிடாவில் 47 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 42 சதவீதம் ஒபாமா கட்சியினரும், 39.5 சதவீதம் ராம்னி கட்சியினரும் 18 சதவீதம் எந்த கட்சியையும் சாராதவர்கள். பெரும் கூட்டம் இருந்ததால், சில பகுதிகளில் முன்வாக்குப் பதிவு நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதுவரை ஏழு லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ள நெவடாவில் ஒபாமா கட்சியினர் 44 சதவீதமும், ராம்னி கட்சியினர் 37 சதவீதமும் வாக்களித்துள்ளனர். எந்த கட்சியையும் சாராதவர்கள் 19 சதவீதம்.
இன்னொரு முக்கியமான திருப்புமுனை மாநிலமான ஐயோவாவிலும் ஒபாமா கட்சியினர் 42 சதவீதம், ராம்னி கட்சியினர் 32 சதவீதம், பொது வாக்காளர்கள் 25.6 சதவீதம் என 6 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில், உட்கட்சி தேர்தல் முதல் அதிபர் தேர்தல் வரை ஒபாமாவுக்கு ஐயோவாவில் பெரும் ஆதரவு கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது
ராம்னிக்கு சாதகமாக திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட வட கரோலினா மாநிலத்தில் பதிவான 27 லட்சம் வாக்குகளில் 48 சதவீதம் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியை சார்ந்தவர்கள். 31 சதவீதம் ராம்னியின் குடியரசுக்கட்சியும் மீதம் 21 சதவீதம் பொது வாக்காளர்களும் ஆவர்.
ஒபாமாவுக்காக ஓட்டுபோட வந்த 108 வயது பாட்டி!
தென் கரோலினா மாநிலத்தில் 108 வயது மூதாட்டி முதல் முறையாக வாக்களிக்கப் போகிறார். எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு ட்ரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. அதனால் இதுவரை வாக்களிக்கவும் இல்லை. இந்த தடவை தேர்தல் விவாதங்களை கவனித்து வந்த அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால், குடும்பத்தினர் கவுண்டி தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
மருத்துவர் சான்றிதழ்களுடன் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வரும் உறவினரிடம் நான் ஒட்டுப் போடப்போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வருகிறார். கறுப்பு இனத்தை சார்ந்த இந்த மூதாட்டி ஒபாமாவுக்கு வாக்களிப்பதற்காக வேண்டி இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டாராம்!
தேசிய அளவில் ஒபாமா முண்ணனி
ஏபிசி - வாஷிங்டன் போஸ்ட் கருத்துக்கணிப்பில் 51 சதவீத்த்தினர் ஒபாமாவின் அதிபர் செயல்பாட்டை அங்கீகரித்துள்ள்னர். பொருளாதார விஷயத்தை யார் சிறப்பாக கையாளக்கூடியவர் என்பதிலும் ராம்னியை விட ஒபாமாவுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. தங்களின் சொந்த விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு, ஒபாமா தான் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என 55 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை இழந்த ராம்னி குழுவினர்
நியூ ஹாம்ப்ஷையர் மா நிலத்தில் நடந்த பிரச்சார ஊர்வலத்தில், கடைசிக் கட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறீர்கள் என்று சி.பி.எஸ் செய்தியாளர் கேட்ட போது ‘பிராத்தனை செய்கிறோம்' என்று பதில் சொல்லியுள்ளார்.
இன்னொரு தேர்தல் குழு முக்கிய உறுப்பினரோ 'ஒபாமா கண்டிப்பாக தோல்வி அடைவார் என என்னால் சொல்ல முடியவில்லை' என்று கூறியுள்ளதாக சி.பி.எஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அமெரிக்க தேர்தல் ஸ்பெஷல்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications