ரொம்ப நல்லவருங்க கேஜ்ரிவால்... சொல்கிறார் அன்னா

அட அன்னா ஹஸாரே என்று மக்கள் ஆச்சரியப்பட்டுப் போய் நின்ற காலம் போய், என்னா ஹஸாரே என்று ஒருவிதமான அதிருப்தியோடு கேட்கும் காலம் வந்து விட்டது. இப்போது முன்பு போல அன்னாவின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தர முன்வருவதில்லை.
அதேசமயம், அன்னாவுடன் ஒருயில் ஈருடலாக இணைந்திருந்து பின்னர் அரசியல் பாதைக்காக பிரிந்து போய் விட்ட அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் மட்டும் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசி வருகிறார்.
இந்தப் பின்னணியில் குவஹாத்திக்கு வந்த அன்னா ஹஸாரே, கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவர் பேசுகையில்,
எனது பாதையும், கேஜ்ரிவாலின் பாதையும் வெவ்வேறாக இருந்தாலும், எங்கள் இலக்கு ஒன்றுதான். நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள மாட்டோம். அரவிந்த் கேஜ்ரிவாலை நான் ஆதரிக்கிறேன். அவரையும், அவரை போன்ற நல்லவர்களையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு மக்களை கேட்டுக் கொள்வேன்.
நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. அரசியலில் நிகழும் தவறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். தேவைப்பட்டால், மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன். ஜனலோக்பால் சட்டம் வரும் வரை ஓயமாட்டேன். இந்த போராட்டம் 20 ஆண்டுகள் கூட நடக்கலாம் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications