ராஜினாமா செய்த விக்ரம் பண்டிட்டுக்கு 15.5 மில்லியன் டாலர் வழங்குகிறது சிட்டி குரூப்

சிட்டி குரூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விக்ரம் பண்டிட் கடந்த மாதம் ராஜினாமா செய்திருந்தார். அந்நிறுவனத்தின் தலைவரான மைக்கேல் ஓ நெய்ல். விக்ரம் பண்டிட்டின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்திருப்பதாக சொன்னதாலேயே ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விக்ரம் பண்டிட்டின் சிறப்பான பணிக்காக இத்தொகை வழங்கப்படுகிறது என்று சிட்டி குரூப் நிறுவனம் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது!
விக்ரம் பண்டிட்டின் இடத்தில் அனேகமாக ஐரோப்பியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான சிட்டி குரூப் பொறுப்பாளரான மைக்கேல் கோர்பெட் பொறுப்பேற்கக் கூடும்.
இதற்கு முன்பாக சிட்டி குரூப் நிறுவனத்தில் இருந்து பணிபுரிந்து வெளியேறியோருக்கும் இப்படி சிறப்புத் தொகை வழங்கப்பட்ட முன்னுதாரணம் இருக்கிறது என்று சிட்டி குரூப் கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications