பால் தாக்கரேவை பார்க்கச் சென்ற அமிதாப், அபிஷேக் பச்சன் காயம்

சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவின் உடல் நிலை நேற்று இரவு மிகவும் மோசமானது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து அறிந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனை அழைத்துக் கொண்டு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தாக்கரேவின் வீடான மதோஸ்ரீக்கு நேற்று இரவு சென்றார்.
அப்போது அங்கு தாக்கரேவின் உடல்நிலை குறித்து அறிந்த சிவ சேனா தொண்டர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். காரை விட்டு இறங்கிய அமிதாப் மற்றும் அபிஷேக் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர்.
இது குறித்து அமிதாப் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
ஆமாம், நானும் அபேஷக்கும் பால் தாக்கரேவை பார்க்கச் சென்ற இடத்தில் காயமடைந்தோம். அங்குள்ள மருத்துவர்கள் எங்களுக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது நலமாக உள்ளோம். கூலி படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நான் படுகாயமடைந்தபோது தாக்கரே என்னை மருத்துவமனையில் வந்து பார்த்தார். அப்போது அவர் தான் வரைந்த ஒரு கார்ட்டூனை கொடுத்தார். அதில் எமராஜ் தோற்றார் என்பது போன்று வரையப்பட்டிருந்தது. கூலி பட விபத்துக்கு பிறகு நினைவில்லாத நிலையில் பெங்களூரில் இருந்து என்னை மும்பை கொண்டு வந்தபோது அவருடைய ஆம்புலன்ஸில் தான் என்னை ஏற்றிச் சென்றனர்.
என் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் என்னை தொடர்பு கொண்டு, உண்மையைச் சொல்லுங்கள், உங்களுக்கு இதில் தொடர்புள்ளதா என்று கேட்டார். நான் இல்லை என்று கூறியவுடன் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் நான் உங்களுடன் இருக்கிறேன் என்றார். நீங்கள் ஒரு நடிகர் உங்கள் வேலையைச் செய்யுங்கள் என்றார் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications