இந்த தீபாவளிக்கு பட்டாசு ஜாஸ்திதான்... ஆனால் 'பொல்யூஷன்' குறைவாம்!

Subscribe to Oneindia Tamil

Crackers
சென்னை: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் நிறைய வெடிக்கப்பட்டாலும் கூட ஒலி மாசு குறைவாக இருந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்-செயலாளர் எஸ்.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படு ஒலி மாசுபாடு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆண்டு தோறும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் கடந்த 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை வாகனங்கள் மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.ஒலி மாசு மற்றும் காற்று மாசு குறித்து சென்னையில் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், சவுகார்பேட்டை, தியாகராயநகர், பெசன்ட் நகர் ஆகிய 5 இடங்களில் கடந்த 6-ந் தேதி மற்றும் 11-ந் தேதி அன்று நடத்தப்பட்டது.

இதுபோன்ற ஆய்வு, மதுரை, சேலம், திருச்சி, கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஓசூர், கடலூர் ஆகிய 11 நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது, தீபாவளி அன்று ஒலியின் அளவு 72.9 டெசிபல் ஆக இருந்தது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று ஒலியின் அளவு 79.4 டெசிபல் ஆக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் ஒலி அளவு 8.2 சதவீதம் குறைந்து காணப்பட்டது.

நுங்கம்பாக்கத்தில் 'ஓவர் சத்தம்'

இந்த தடவை அதிக பட்ச அளவாக நுங்கம்பாக்கத்தில் 77.7 டெசிபெல் ஆகவும், அதற்கு அடுத்தபடியாக திருவல்லிக்கேணியில் 76.9 டெசிபெல் ஆகவும் ஒலி அளவு பதிவாகி இருந்தது.

மேலும், இரவு 7 மணிக்கு கண்டறியப்பட்ட ஒலிமாசுவை விட இரவு 11 மணிக்கு ஒலி மாசு நன்கு குறைந்து காணப்பட்டது. இந்த ஆண்டு ஒலிமாசு குறைந்ததற்கு விழிப்புணர்வு பிரசாரமும் அதில் பள்ளி மாணவ-மாணவிகளின் பங்கேற்பும்தான் முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+