பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த தொலைத் தொடர்புத்துறையை கொன்று விட்டது சிஏஜி: கபில் சிபல்

இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கபில் சிபல், ஒலிபரப்புத்துறை இணைமைச்சர் மணிஷ் திவாரி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கபில் சிபல் கூறுகையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசு எதிர்பார்த்த வருவாய் ஈட்ட முடியாமல், ஏலம் தோல்வியில் முடிந்துள்ளது. இப்படி ஆகும் என்று நான் ஏற்கெனவே கூறினேன். இந்தத் தோல்வி மத்திய தணிக்கைத்துறை அதிகாரியான சி.ஏ.ஜியின் முடிவால் ஏற்பட்டது.
எதை வைத்துக் கொண்டு கடந்த 2008ம் ஆண்டு, 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விற்றிருந்தால் ரூ.1.76 லட்சம் கோடி லாபம் கிடைத்திருக்கும் என்று சி.ஏ.ஜி கூறினார் என்பது தெரியவில்லை.
கொள்கை முடிவுகள் எடுக்கும் பணியை அரசிடம் விட்டுவிட வேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் மட்டுமே தலையிட வேண்டும். 2ஜி குறித்து செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டதால், தொலைத் தொடர்புத் துறைக்கு சரிவுதான் ஏற்பட்டுள்ளது.
பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த இந்தத் துறை சிதைந்துபோய் விட்டது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படிதான் 2ஜி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் மிகக் குறைந்த வருவாயாக ரூ.9,407 கோடி கிடைத்ததற்கு சி.ஏ.ஜியே காரணம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை இழப்பீடு குறித்து தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டது இப்போது தெளிவாகிவிட்டது. இதனால் 2ஜி விவகாரத்தில் சி.ஏ.ஜி. மதிப்பீடு செய்து வெளியிட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இப்போது விலை போகாத மண்டலங்களில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என்றார்.
நாங்கள் கொண்டவில்லை..
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், 2ஜி முறைகேட்டால் ரூ.1.76 லேட்சம் கோடி இழப்பு என்று கூறுவது தவறான கருத்து. 2ஜி ஏலம் தோல்வியை நாங்கள் கொண்டாடவில்லை என்றார்.
மேலும் சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் சரிசெய்வோம். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டம் சரியாக நடைபெறவில்லை. குளிர்கால கூட்டத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேணடும். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த விதியின் கீழ் விவாதிப்பது என்று தெரியவில்லை என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications