கொங்கு மண்டல வளர்ச்சிக்கு பாடுபடும் கட்சியுடன்தான் கூட்டணி: கொமுக ஈஸ்வரன்
ஈரோடு: கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் கட்சியுடன் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளதாக கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
தமிழகத்துக்கான மொத்த வருமானத்தில், சுமார் 50% கொங்கு மண்டலத்தில் இருந்தே கிடைக்கிறது. தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் லட்சக் கணக்கில் இங்கே வேலை செய்கின்றனர். அவர்களுக்கான வருமானமும் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தே உள்ளது.
கொங்கு மண்டலத்தில்தான் தொழில் வளர்ச்சி அதிகம். ஆனால் மின்பற்றாக்குறையினால் இங்கு தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே சென்னையைப் போல் கொங்கு மண்டலத்துக்கும் மின் விநியோகம் செய்து தரப்பட வேண்டும்.
சென்னை மற்றும் கொங்கு மண்டலம் இரண்டுக்கும் பொதுவாக 5 மணி நேர மின்வெட்டை அமல்படுத்தி சமாளிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளோம்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள வளர்ச்சிப் பணிகளில் அக்கறை செலுத்தும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றார் ஈஸ்வரன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications