ஆவணங்களைத் தாக்கல் செய்யாத ரிலையன்ஸ், பிரிட்டிஷ் கேஸ் நிறுவனங்கள் மீது சிஏஜி தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் கேஸ் ஆகிய நிறுவனங்கள் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்துக்கு சிஏஜி அனுப்பியுள்ள கடிதத்தில், கிருஷ்ணா- கோதாவரி படுகை எரிவாயு எடுப்பது தொடர்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. இதனால் முகேஷ் அம்பானி நிறுவன திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பன்னா- முக்தா- தப்தி எரிவாயு வயல்கள் தொடர்பான ஆவணங்களை பிரிட்டிஷ் கேஸ் நிறுவனம் தாக்கல் செய்யாததால் அந்நிறுவனத்தின் திட்டங்களுக்கான அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சிஏஜி கடிதம் அனுப்பியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிவாயு ஏகபோகத்துக்கு கடிவாளம் போட முயற்சித்த காரணத்தாலேயே பெட்ரோலியத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜெய்பால் ரெட்டி மாற்றப்பட்டார் என்று சர்ச்சை வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிஏஜியின் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அப்ப அடுத்த புயல் வருகிறது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+