போர்க் குற்ற தண்டனையிலிருந்து குரேஷிய ராணுவ தளபதிகள் விடுதலை
திஹேஹ்: யூகோஸ்லாவியாவில் செர்பியர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றச் சாட்டில் சிக்கிய குரேஷியாவின் அண்டே கொடோவினா மற்றும் மர்காக் ஆகிய ராணுவ தளபதிகளை சர்வதேச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
1995-ம் ஆண்டு செர்பியர்களை இனப்படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றம் இருவருக்கும் தண்டனை விதித்திருந்தது. கொடோவினாவுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மர்காக்குக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம், இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்திருக்கிறது.
இருவரும் விடுதலை செய்யப்பட்ட செய்தியை குரேஷியர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். ஆனால் செர்பியாவோ இது ஒரு அரசியல் ரீதியான முடிவு என்று கூறியதுடன் ஆறிய காயத்தை கீறிய செயல் என்று விமர்சனம் செய்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications