பல்கலை ஹால் டிக்கெட்டில் நடிகர் படம்: மாணவர்கள் அதிர்ச்சி
திருவனந்தபுரம்: கோழிக்கோடு பல்கலைக் கழக தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் மாணவரின் புகைப்படத்துக்கு பதில் நடிகர் மோகன்லாலின் புகைப்படம் இடம் பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமபட்டி பகுதியை சேர்ந்தவர் மிதுன் கே.முரளி. இவர் தலக்கோட்டுகரை என்ற இடத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த கல்லூரி, கோழிக்கோட்டில் உள்ள பல்கலைக் கழக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக் கழக தேர்வுகள் அடுத்த வாரம் நடக்கிறது. இதையொட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன் மாணவர் மிதுன் உட்பட கல்லூரி மாணவர்கள் ஹால் டிக்கெட் கேட்டு கோழிக்கோடு பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பம் செய்து இருந்தனர். வெள்ளிக்கிழமையன்று மிதுன் படிக்கும் கல்லூரியில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது, மிதுன் தனது ஹால் டிக்கெட்டை வாங்கி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அதில் மிதுனுடைய புகைப்படத்திற்கு பதிலாக, பிரபல நடிகர் மோகன் லாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. ஆனால், மாணவர் பெயர் மற்றும் விபரங்கள் சரியாக அச்சிடப்பட்டு இருந்தது.
மாணவர்களின் புகைப்படம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உள்ள நிலையில், மிதுனின் ஹால் டிக்கெட்டில் மட்டும் மோகன்லால் புகைப்படம் எப்படி இடம் பெற்றது என்பது பற்றி விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புகைப்படம் மாறியது தொடர்பாக கோழிக்கோடு பல்கலைக் கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications