பீகாரில் சிவன் கோவில் கட்ட இந்துக்களுக்கு உதவும் முஸ்லிம்கள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் சிவன் ஆலயம் கட்ட அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் உதவி செய்து வருகின்றனர்.
பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிவன் ஆலயம் கட்ட அங்குள்ள முஸ்லிம் மக்கள் உதவி செய்து வருகின்றனர்.
இது குறித்து சிவன் கோவில் கட்டுமான கமிட்டியின் தலைவரும், பள்ளி ஆசிரியருமான ராஜ்கிஷோர் ரௌத் கூறுகையில்,
கோவில் கட்ட முஸ்லிம்கள் பணம் மட்டும் கொடுக்கவில்லை. மாறாக கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையவும் பெரிதும் உதவுகின்றனர். இந்த கோவில் கட்டுமானம் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு உதாரணம் என்றார்.
முன்னதாக கடந்த ரமலான் மாதத்தின்போது பீகாரில் உள்ள பகல்பூரில் ஜெயின் கோவில் கட்ட நோன்பு வைத்திருந்த முஸ்லிம்கள் உதவி செய்துள்ளனர். கோவில் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் செல்ல வசதியாக தனது வீட்டின் ஒரு பகுதியையே இடித்துள்ளார் பகல்பூரைச் சேர்ந்த முகமது ஜானேஷர் அக்தர் என்பவர்.
மேலும் இந்த ஆண்டு துவக்கத்தில் கயா மாவட்டத்தில் துர்கா மாதா கோவிலைக் கட்ட சில முஸ்லிம்கள் உதவியுள்ளனர். அவர்கள் பண உதவி செய்ததோடு கட்டுமானப் பணிகளிலும் பங்கேற்றுள்ளனர்.
இது தவிர முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பச்வாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது பக்ரூல் இஸ்லாம் என்பவர் சிவன் ஆலயம் கட்ட தனது நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications