பால்தாக்கரே இறுதி ஊர்வலத்தில் பாதியில் வீட்டுக்குப் போன ராஜ் தாக்கரே

ராஜ்தாக்கரே.... சிவசேனாவிலிருந்து 2005-ம் ஆண்டு வெளியேறி மகராஷ்டிரா நவநிர்மான் சேனாவை உருவாக்கினார். பால்தாக்கரேவை பகைத்துக் கொண்டு தனிக்கட்சி தொடங்க ஒரே காரணம், தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டதுதான்!
இந்நிலையில் பால்தாக்கரே மறைகிறார்... தாக்கரேவின் மறைவுக்குப் பிறகாவது இரண்டு கட்சிகளும் ஒன்றிணையுமா? என்ற விவாதம் எழுந்த நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை என்கிற வகையிலேயே ராஜ்தாக்கரேவின் செயல்பாடுகள் இருந்தன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த வாரம் பால்தாக்கரேவின் உடல்நிலை குன்றியிருந்தபோது அவரைப் பார்க்க வந்திருக்கிறார் ராஜ்தாக்கரே. ஆனால் சிறிது நேரத்திலேயே பால்தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லத்திலிருந்து வெளியே வந்து தமது காரில் அமர்ந்து கொண்டார். சுமார் 2 மணி நேரம் ராஜ்தாக்கரே காரிலேயே அமர்ந்திருந்தார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதைத் தொடர்ந்தேதான் நேற்று காலை பால்தாக்கரே உடல் அவர்து வீட்டில் இருந்து வெளியே எடுத்து வருவதற்கு முன்பாகவே மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து ராஜ்தாக்கரே வெளியே வந்துவிட்டார். உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர்தான் பால்தாக்கரே உடலை வெளியே எடுத்து வந்து டிரக் வண்டியில் ஏற்றினர்.
பால்தாக்கரே உடல் வைக்கப்பட்ட டிரக்கில் ராஜ்தாக்கரே ஏறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. தாக்கரே குடும்பமே டிரக்கில் ஏறியிருக்க ராஜ்தாக்கரே மட்டும் வாகனத்துக்கு முன்னாள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். பிற்பகல் வாக்கில் திடீரென ராஜ்தாக்கரேவை இறுதி ஊர்வலத்தில் காண முடியவில்லை. வீட்டுக்குப் போய்விட்ட ராஜ்தாக்கரே டிவி மூலமாக இறுதி ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது மனைவி ஷர்மிளா. உத்தவ்தாக்கரேவின் மனைவி ராஷ்மியுடனே இருந்தார். பின்னர் மாலையில் சிவாஜிபூங்காவில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் அவர் கலந்து கொண்டார். அங்கு கண்ணீரெல்லாம் சிந்தினார்...
இதைப்பற்றியெல்லாம் சிவசேனா தொண்டர்கள் கவலைப்படுவதாக இல்லை... 'ராஜ்தாக்கரேவால் பால்தாக்கரேவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரால் மிகவும் காயம்பட்டவர் பால்தாக்கரே." என்று விமர்சனத்தோடுதான் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் ராஜ்தாக்கரே சிவசேனாவுடன் இணைவது என்பது பெருங்கேள்வியாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications