விமான பணிப் பெண் பலி: 'தீம் பார்க்' உரிமையாளர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: விமான பணிப் பெண் மரணம் தொடர்பாக ஈ.வி.பி. தீம்பார்க் உரிமையாளர் பெருமாள்சாமி மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி நாகலாந்தை சேர்ந்த விமான பணிப் பெண் அபியா தனது நண்பர்களுடன் ஈ.வி.பி தீம்பார்க்கில் விளையாடச் சென்ற போது ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தீம்பார்க் மூடப்பட்டது. தீம்பார்க் உரிமையாளர் பெருமாள் சாமியும் அவருடைய மகனும் தலைமறைவானார்கள்.
இந்த நிலையில் சென்னை வடபழனியில் சிகிச்சை பெற்று வந்த பெருமாள்சாமியை இன்று போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே இந்த சம்பவம் குறித்து 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications