கடைசி ஆசை என்று எதுவும் இல்லை: அஜ்மல் கசாப்
Subscribe to Oneindia Tamil

26/11 தீவிரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததார். இதையடுத்து கசாபை தூக்கிலிட கடந்த 8ம் தேதி முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை ஏர்வாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடுவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை தூக்கிலிடப் போகும் முன்பு கசாபிடம் அவனுடைய கடைசி ஆசை என்னவென்று போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு அவன் தனக்கு கடைசி ஆசை என்று எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளான்.
கசாபின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து அவன் ஜனாதிபதியிடம் கருணை மனுவை கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி அளித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications