ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.5 கோடி ப்ரௌவுன் சுகர் கடத்திய நபர் கைது
விசாகப்பட்டினம்: ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ப்ரௌவுன் சுகர் போதைப் பொருளை கடத்தியதாக சென்னை சென்னையைச் சேர்ந்த வாலிபரை ஆந்திரமாநில ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து யஷ்வந்த்பூருக்கு விசாகப்பட்டினம் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் செவ்வாய்கிழமை மாலை விசாகப்பட்டினத்திற்கு வந்தபோது படுக்கை வசதி கொண்ட எஸ்-2 பெட்டியில் 2 வாலிபர்கள் ஏறினார்கள்.
ரெயில் விஜயநகரம் சென்றபோது ரெயில்வே போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. இரண்டு பேரில் ஒரு பயணி திடீரென ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினான். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ரெயிலில் இருந்த வாலிபரை அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து அவன் வைத்திருந்த பேக், சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் (பிரவுன்சுகர்) இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவனை கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், சென்னையைச் சேர்ந்த அப்துல்ஹாசன் என்பது தெரிய வந்தது. இவனுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். பிடிப்பட்ட அப்துல்ஹாசனின் கூட்டாளிகள் சென்னையில் இருக்கலாம். என்பதால் தமிழக போலீசாருக்கும் இதுபற்றி தகவல் கொடுத்து போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க முடிவு செய்துள்ளதாக டி.எஸ்.பி. பீமாராவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications