பாஜகவை தாஜா செய்ய இன்று இரவு விருந்து கொடுக்கிறார் மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சிக்கு இன்று இரவு விருந்து கொடுக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தவும் ஆதரவுக் கட்சிகளின் ஆதரவை உறுதியை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தொடர் விருந்து வழங்கி வருகிறார் பிரதமர் மன்மோகன்சிங். ஆளும் கூட்டணிக் கட்சிகள், அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு விருந்து கொடுத்து முடித்த கையோடு எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் விருந்து கொடுக்க திட்டமிட்டிருந்தார்.

அப்போதுதான் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைந்துவிட்டதால் இரவு விருந்தை ரத்து செய்திருந்தார் பிரதமர் மன்மோகன்சிங். இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது. கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டிருப்பதுடன் இன்று பிரதான எதிர்க்கட்சியான பாஜகவினருக்கு விருந்தும் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

விருந்து மருந்து போல பலன் தருமான்னு பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+