திருவாவடுதுறை ஆதீனம் மரணம் - புதிய ஆதீனம் பொறுப்பேற்பு
நாகப்பட்டனம்: திருவாவடுதுறை ஆதீனம் 23வது பட்டம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் மரணமடைந்தார். இதையடுத்து 24வது ஆதீனமாக மீனாட்சிசுந்தர தேசிக பரமாசாரியார் பொறுப்பேற்றுள்ளார்.
மயிலாடுதுறை அருகே உள்ளது திருவாவடுதுறை ஆதீன மடம். இதன் 23வது பட்டமாக குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் இருந்து வந்தார். இவர் இன்று அதிகாலையில் காலமானார்.
சமீபத்தில்தான் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சைக்குப் பின்னர் மடத்திற்குத் திரும்பினார். ஆனால் மீண்டும் நேற்று நள்ளிரவுக்கு மேல் உடல் நலக்குறைவு ஏற்படவே அவர் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே காலமானார்.
தமிழ் வளர்த்த சைவ மடங்களில் தலையாயது திருவாவடுதுறை ஆதீனம். சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சைவ மடம். நெடிய பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 23 வது பட்டத்தை அலங்கரித்தவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
அவரது மறைவைத் தொடர்ந்து 24வது ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கிளை மடமான திருவிடைமருதூர் ஆதீன தம்பிரானாக உள்ள சீர்வளர்சீர் மீனாட்சிசுந்தர தேசிக பரமாசாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டார். இன்று அவர் தனது பொறுப்பை ஏற்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications