பார்க்கில் 14 வயது சிறுமியுடன் உறவு... 4 மாணவர்கள் கைது!
லண்டன்: இங்கிலாந்தின் ஒர்சஸ்டர்ஷயர் பகுதியில் ஒரு பூங்காவில் வைத்து குடிபோதையில் இருந்த 14 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக 15 முதல் 18 வயது வரையிலான 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
டிராய்ட்விச் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நால்வரையும் கோர்ட்டில் நிறுத்திய போலீஸார் அவர்கள் மீது கற்பழிப்பு புகாரை சுமத்தினர். இருப்பினும், இவர்கள் நால்வரும் தாங்கள் அந்த சிறுமியின் விருப்பத்துடன்தான் செக்ஸ் உறவு கொண்டதை ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து கற்பழிப்புப் புகாரை கோர்ட் தள்ளுபடி செய்தது.
இவர்கள் சிறுமியுடன் உறவு கொண்டபோது அதை மொபைல் போன் வீடியோவிலும் பதிவு செய்துள்ளனர்.
சிறுமியிடம் நடந்த விசாரணையின்போது, தான் செக்ஸ் ரீதியான தொடர்புகளை மட்டுமே அனுமதித்ததாகவும், உடல் உறவை தான் அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.
இருப்பினும் சிறுமி, செக்ஸ் ரீதியான நடவடிக்கைக்கு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந்த நான்கு பேரும் உறவில் ஈடுபட்டதால் இதை கற்பழிப்பாக கருத முடியாது என்று கோர்ட் கூறி விட்டது.
கோர்ட் விசாரணையின்போது அரசுத் தரப்பு வக்கீல் வாதிடுகையில், அந்த சிறுமி அரை லிட்டர் வோத்கா அருந்தியிருந்தார். பார்க்கில் வைத்து அந்த நான்கு பேரையும் சந்தித்தார். அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தன்னை முத்தமிட அவர் அனுமதித்தார். ஆனால் நான்கு பேரும் எல்லை மீறி உறவு வரை போய் விட்டனர். மது போதையில் இருந்ததால் அந்த சிறுமியால், நால்வரையும் தடுக்க முடியவில்லை என்று வாதிட்டார்.
தற்போது கைதான அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.












Click it and Unblock the Notifications