தமிழர்கள் போராட்டம் எதிரொலி: மலேசிய பயணத்தை ரத்து செய்தார் மகிந்த ராஜபக்சே

மலேசியாவில் டிசம்பர் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் மாநாடு நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சேவை மலேசியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அந்நாட்டின் பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வந்தன. மேலும் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக சில நாட்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் "தவிர்க்க முடியாத காரணத்தால் மலேசிய மாநாட்டில் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டங்களை கைவிடுவதாக மலேசிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
லண்டனில் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மகிந்த ராஜபக்சே செல்வதும் அங்கு தமிழர்கள் எதிர்ப்பு காரணமாக மீண்டும் இலங்கைக்கே அவர் திரும்புவதும் வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு காரணமாக ராஜபக்சேவின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications