முட்டைகோஸ் பொறியலும்.. மூனு பாக்கெட் 'காண்டமும்', ப்ளீஸ்!

ஆக்ஸ்போர்டில்தான் இந்த வித்தியாசமான ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் பெயரே Cabbages and Condoms என்று வினோதமாக வைத்துள்ளனர்.
இங்கிலாந்திலேயே இப்படி சாப்பாட்டோடு பாதுகாப்பான செக்ஸ் அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் தரும் முதல் ஹோட்டல் இதுதானாம். முதலில் இப்படிப்பட்ட ஹோட்டல் தாய்லாந்தில்தான் தொடங்கப்பட்டதாம். செக்ஸ் டூரிசத்திற்குப் பெயர் போனதாச்சே தாய்லாந்து... எனவேதான் இந்த லந்தை அங்கிருந்து ஆரம்பித்துள்ளனர். அங்கு 6 ஹோட்டல்கள் இப்படி உள்ளனவாம். அத்தனையும் ஹிட்டாம். எனவேதான் இபபோது இங்கிலாந்துக்கும் கிளை பரப்பியுள்ளனர்.
இந்த ஆக்ஸ்போர்ட் ஹோட்டலில் விதம் விதமான தாய்லாந்து நாட்டு உணவு வகைகள் கிடைக்கின்றன. கூடவே நமக்கு பாதுகாப்பான செக்ஸ் உறவுக்குத் தேவையான விஷயங்களையும் மெனு கார்டில் இணைத்து வைத்துள்ளனர். அதில் உள்ளதை ஆர்டர் செய்தால் சாப்பிட்டு முடித்து பில் தரும்போது அதையும் கூடவே தருகிறார்கள். பெஸ்ட் ஆப் லக் சொல்லியும் அனுப்பி வைக்கிறார்கள்.
மேலும், பாதுகாப்பான செக்ஸுக்கு என்னவெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்த பிட் நோட்டீஸையும், அதாவது துண்டுப் பிரசுரத்தையும் கூடவே அளிக்கிறார்கள். அத்தோடு நில்லாமல் ஆணுறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல்வேறு விதமான வேடிக்கைப் பொருட்களையும் நமக்கு அளிக்கிறார்கள்... எல்லாம் காசுக்குத்தான், ஓசியில் அல்ல.
தாய்லாந்தில் உள்ள ஹோட்டல்களில் பில்லுடன் ஆணுறைகளை இலவசமாகவே தருகிறார்கள். இருப்பினும் இங்கிலாந்து ஹோட்டலில் இலவசமாக தருவதில்லை.
ஆணுறைகளைப் பயன்படுத்தி விதம் விதமான சிற்பங்கள், ஓவியங்களும் கூட இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவாம். அதாவது பாதுகாப்பான செக்ஸ் என்பதை நமக்கு நினைவூட்டும் வகையில் இப்படி ஆணுறைகளின் பின்னணியில் பலவிதமான பொருட்களை உருவாக்கி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்கின்றனர் இந்த ஹோட்டல்காரர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications