இலங்கை அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை .. மழை பெய்யலாம்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பலமான கடல் காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 மணி முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தென் தமிழக கடலோர பகுதிகளில் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பயங்கர சூறாவளிக் காற்று வீசி வருகிறது. கடலும் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை. கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. காலை 7 மணி முதலே அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகு துறையில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.












Click it and Unblock the Notifications