செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல்: நாசாவின் ரோபோவுக்கு ஆபத்து

செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ள நாசா கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான தடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்நிலையில் அங்கு வீசும் புழுதிப் புயலை படம்பிடித்து அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து நாசா விஞ்ஞானி ரிச் ஜுரெக் கூறுகையில்,
புழுதிப் புயல் செவ்வாய் கிரகத்தின் பெரும்பாலான இடங்களில் வீசுகிறது. அதனால் பார்க்கும் இடமெல்லாம் புழுதியாகக் காட்சியளிக்கிறது. சில புழுதிப் புயல்கள் பெரிய அளவில் உருவெடுப்பதும், சில திடீர் என்று காணாமல் போவதும் ஏன் என்று ஆய்வு செய்து வருகிறோம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் வீசும் காலம் துவங்கியுள்ளது. கடந்த 16ம் தேதி செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை 25 டிகிரி அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த புயல் தொடர்ந்தால் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள ரோபோவின் செயல்பாடுகள் பாதிக்கக்கூடும். புழுதிப் புயல் உயர எழுவதால் அது சூரியனின் வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. புழுதி ரோபோவின் சோலார் பேனலில் படிவதால் அதனால் சூரிய வெப்பத்தை எடுக்க முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications