'தாக்கரே': பேஸ்புக்கில் லைக் போட்டு கைதான மும்பை பெண்ணுக்கு சென்னை கல்லூரியில் இடம்

மும்பையில் பால்தாக்கரே இறுதி ஊர்வலத்துக்காக 'பந்த்' அனுசரிக்கப்பட்டது. இதுபற்றி ஷாகீன் தத்தா என்ற மாணவி பேஸ் புக்கில் விமர்சனம் செய்திருந்தார். இந்த கருத்துக்கு ரேணு சீனிவாசன் லைக் போட்டிருந்தார். இது பயங்கர சர்ச்சையை கிளப்பியது. இதனை எதிர்த்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் 2 மாணவிகளையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். கைது செய்த 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
காவலில் வைக்க உத்தரவிட்ட மும்பை மாஜிஸ்திரேட்டு இட மாற்றம் செய்யப்பட்டார். பேஸ்ஃபுக்கில் பதிவிட்ட பெண்கள் இருவரும் பேஸ்ஃபுக் அக்கவுண்ட்டை காலி செய்தனர்.
இந்த நிலையில் மாணவி ரேணு மும்பையை விட்டு வெளியேறி சென்னையில் மேல் படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளார். சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் சவுண்டு என்ஜினீயரிங் பற்றி 2 ஆண்டு படிப்பில் சேர விண்ணப்பித்து இருந்தார். இதையடுத்து மாணவி ரேணு சீனிவாசனை சேர்த்துக்கொள்ள கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தன் மீதான பேஸ் புக் புகார்கள் மற்றும் கைது நடவடிக்கை சர்ச்சை காரணமாக தனது எதிர்கால கல்வி பாதிக்கப்படுமா என மாணவி அஞ்சினார். ஆனால் அவருக்கு நேர்முகத் தேர்வு இல்லாமலேயே கல்லூரியில் இடம் அளிக்க நிர்வாகம் முன் வந்துள்ளது.
ஏனெனில் நேர்முகத்தேர்வு சமயத்தில்தான் ரேணு சர்ச்சையில் சிக்கி கைதாகியிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையிலும் பால்காரை விட்டு வெளியேற முடியவில்லை. அதனால் ரேணுவால் நேர்முகத்தேர்வுக்கு வர இயலவில்லை. இப்பொழுது ரேணுவிற்கு எதிரான வழக்கு ஒன்றுமில்லை என்றாகிவிட்ட நிலையில் சென்னை கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பேஸ் ஃபுக் விவகாரம் கிளம்பும் முன் ரேணு சென்னை கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார். அதன் பிறகு இந்த பிரச்சினை உருவானதால் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட் டது. தற்போது நிலைமை சுமூகமாகி விட்டது. ரேணுவுக்கு நேர்முக தேர்வு இல்லாமலேயே கல்லூரியில் சேர விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று ரேணுவின் சகோதரர் கூறியுள்ளார்.
கைது நடவடிக்கைக்குப் பின்னர் ஷகீன் பேஸ்ஃபுக்கை விட்டே விலகிவிட்டார். ரேணு இப்பொழுது எல்லாம் குட்மார்னிங் உடன் நிறுத்திக்கொள்கிறாராம்.












Click it and Unblock the Notifications