போடியில் படிக்காத மகனை மிரட்ட விஷம் குடித்த பெண் பரிதாப சாவு
தேனி: போடியில் படிக்காத மகனை மிரட்ட விஷம் குடித்த பெண் பரிதாபமாக உயிர் இழந்தார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி குண்டாலீஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். ஆட்டோ டிரைவர். அவரது மனைவி மணிமாலா (35). அவர்களுக்கு அருண்பாண்டி (14) என்ற மகனும், அருணாதேவி (12) என்ற மகளும் உள்ளனர்.
அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் அருண்பாண்டிக்கு படிப்பு மீது கவனம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மணிமாலா தனது மகனை ஒழுங்காக படிக்குமாறு கண்டித்தும், அவ்வப்போது அறிவுரை வழங்கியும் வந்துள்ளார். ஆனால் அருண்பாண்டி தாய் பேச்சைக் கேட்காமல் படிப்பில் கவனம் செலுத்தாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மணிமாலா அருண்பாண்டியை ஒழுங்காக படிக்க வேண்டும் என்று கண்டித்துள்ளார். அப்போது மகனை மிரட்ட நினைத்த அவர் நீ நன்றாக படிக்காவிட்டால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தும் விட்டார். பூச்சி மருந்தை குடித்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications