ஐ.நாவில் தனிநாடு அங்கீகாரத்துக்கு முந்தைய நிலை தகுதியை பெற்றது பாலஸ்தீனம்!: கடுப்பில் அமெரிக்கா

பாலஸ்தீனம் -இஸ்ரேல் இடையேயான மோதல் நிலையால் இன்னமும் ஒரு தனிநாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அல்லாத நாடு (non- member state) என்ற தகுதியோடு பாலஸ்தீனம் இருந்து வருகிறது. இத்தகுதிக்கு ஒருபடி மேலாக அதாவது தனிநாட்டு அங்கீகாரத்துக்கு முந்தைய படிநிலையான ஐ.நாவின் ‘பார்வையாளார் தகுதி"பெற்ற நாடாக (Observer status) பாலஸ்தீனம் உருவெடுத்திருக்கிறது.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்தியா உட்பட 138 நாடுகள் வாக்களித்த. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அமெரிக்காவின் லாபிக்குட்பட்ட 41 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் ‘பார்வையாளர் தகுதி' பெற்ற நாடாகி இருக்கிறது பாலஸ்தீனம்.
இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்கக் கூடிய உரிமை பாலஸ்தீனத்துக்கு இன்னமும் கிடைக்காவிட்டாலும் ஐக்கிய நாடுகள் சபையின் இதர அமைப்புகளில் பாலஸ்தீனம் இணைந்து செயல்படலாம். குறிப்பாக சர்வதேச நீதிமன்றத்தில், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக நேரடியாக முறையிடக் கூடிய தகுதி பாலஸ்தீனத்துக்குக் கிடைத்திருக்கிறது்.
பாலஸ்தீனத்துக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை ஏற்க முடியாத அமெரிக்காவும் இஸ்ரேலும் காசா போர் முனையில் மேலும் மோசமான விளைவுகளை இது உருவாக்கும் என்று குமுறியிருக்கின்றன.
ஐ.நா.வின் அங்கீகாரத்தை பாலஸ்தீனம் பெற்ற செய்தியை அந்நாடு உற்சாகமாகக் கொண்டாடியது. யுத்த முனையான காசா பகுதியில் குண்டு மழை பொழிய உற்சாகம் கரைபுரண்டோடியது. ஐக்கிய நாடுகள் சபையின் 194-வது நாடாக பாலஸ்தீனம் உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications