ராம்னிக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளித்த ஒபாமா!
வாஷிங்டன்: தன்னை எதிர்த்து அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற மிட் ராம்னிக்கு, அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் விருந்து கொடுத்தார்.

அழைப்பை ஏற்றுக்கொண்ட ராம்னி நேற்று, கறுப்பு நிற எஸ்.யூ.வி யில், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனியாக வந்திருந்தார். கார் கதவைக்கூட தானே திறந்து, மூடிக்கொண்டார். வெள்ளை மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள அறையில், தெற்கு பகுதியில் உள்ள புல்வெளியை பார்க்கும் வண்ணம் அமர்ந்து இருவரும் உணவருந்தினர். ஒபாமாவும் ராம்னியும் சுமார் 70 நிமிடங்கள் தனியாக பேசிக்கொண்டனர்.
ஒபாமாவுக்கு ராம்னி வாழ்த்து
மீண்டும் வெற்று பெற்று அதிபர் ஆகியுள்ள ஒபாமாவுக்கு தேர்தல் வெற்றிக்காகவும், அடுத்த நான்கு ஆண்டுகள் ஆட்சிக்காகவும் கவர்னர் ராம்னி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் என வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இருவரும் தொடர்பில் இருந்து கொள்ள விரும்புவதாகவும், இருவருக்கும் விருப்பமான விஷயங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும், மேலும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
ராம்னிக்கு பதவி கிட்டுமா?
ராம்னியின் சில கொள்கைகள் தமக்கு ஏற்புடையதாக இருப்பதாகவும், அவரை சந்தித்து பேசுவதற்கும், வாய்ப்பு இருந்தால் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும், வெற்றி பெற்ற பின்னர் ஒபாமா தெரிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் நேற்று முதல் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
குறிப்பிட்ட எந்த திட்டங்களுடனும் பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து இருந்தாலும், அடுத்தடுத்த சந்திப்பிற்கான முன்னோட்டமாகவே இது கருதப்படுகிறது.
தன்னை எதிர்த்து உட்கட்சி தேர்தலில் தீவிரமாக போட்டியிட்ட ஹிலாரி க்ளின்டனை, தனது பிரதான அமைச்சராகவும், இன்னொருவரான ஜோ பைடனை துணை அதிபராகவும் அமர்த்திக் கொண்டவர் ஒபாமா. கூடுதலாக எதிர்க்கட்சியை சார்ந்தவர்களையும் தனது அமைச்சர்களாக வைத்துக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் ராம்னிக்கு ஏதாவது முக்கிய பதவியைத் தர ஒபாமா விருப்ப்படுவதாக தெரிகிறது. ஒபாமா - ராம்னி யின் முதல் சந்திப்பு அந்த எதிர்ப்பார்ப்புகளை அதிகரிக்க வைத்துள்ளது.
தேக்க நிலையை தடுக்க ராம்னி உதவுவாரா?
இன்னொரு பக்கம், 'ஃபிஸ்கல் க்ளிஃப்' எனப்படும் பொருளாதார தேக்கநிலை அபாயத்தை தடுப்பதற்காக, குடியரசுக் கட்சி தலைவர்களுடன் ஒபாமாவின் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஒபாமாவும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஜான் பேனருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
250 ஆயிரம் டாலர்களுக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியை அதிகரிக்க வேண்டும். 200 ஆயிரம் டாலர் வரை வருமானம் உள்ளவர்களுக்கு பழைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஒபாமா வலியுறுத்துகிறார்.
குடியரசுக் கட்சியினரோ, பணக்காரர்களுக்கும் வருமான வரியை உயர்த்தக்கூடாது என்று அடம் பிடிக்கின்றனர். இரு கட்சியினருக்கும் உடன்பாடு ஏற்படுவதற்கு ராம்னியும் உதவுவாரா என்ற எதிர்ப்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
தேர்தலில் நேருக்கு நேர் ஒருத்தரை ஒருத்தர் கடுமையாக சாடிக்கொண்டாலும், தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே இருவரும் ஒன்றாக விருந்துண்ணும் காட்சி அமெரிக்க அரசியலில் சாதாரணமே என்றாலும், ஒபாமா ஒரு படி மேலே போய் யாரையும் பகையாக நினைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். தொடர்ந்து அவர்களுடன் இணைந்து பணியாற்றி, திறமையை பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். அந்த வகையில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஒபாமாவும் ஒரே கொள்கையுடைவர்கள் என்று சொல்லலாம்.
'எதிரியாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தா ஒரு வாய் காப்பித் தண்ணி கொடுப்பது தான் தமிழர் பண்பாடு' என்று சொல்லப்படும் தமிழகத்தில் இப்படி ஒரு விருந்தோம்பல் காட்சியை காண முடியாதா? என்ற ஏக்கமும் வரத்தான் செய்கிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications