லிபியாவில் காணமல் போன எதிர்கட்சித் தலைவர்... 19 ஆண்டுக்குப் பின் சடலமாக கண்டெடுப்பு
லிபியா: லிபியா நாட்டில் கடாபி ஆட்சிக் காலத்தில் காணாமல் போன எதிர்கட்சித்தலைவரின் உடல் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
லிபியாவில் கடாபி ஆட்சி காலத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் மன்சௌர் அல்-கிகியா. இவர் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பியவர். திடீரென்று 19 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் அவர் காணமல் போனார். கடாபிக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக வதந்தி பரவியது.
ஆனால் அல்-கிகியாவை கடாபியின் தொண்டர்கள்தான் கடத்திக் கொலை செய்து, அவரது உடலை சவக்கிடங்கில் மறைத்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில், லிபியாவில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடுத்து கடாபி ஆட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் புரட்சிக்காரர்களால் பிடிக்கப்பட்டு நடுரோட்டில் கொல்லப்பட்டார் கடாபி. அவரின் மரணத்திற்குப் பின்னர் லிபியாவில் நடைபெற்ற விசாரணையில், அல்-கிகியாவின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.
19 ஆண்டுகள் கடந்த நிலையில், அல்-கிகியாவின் உடல் பிரேதபரிசோனை செய்யப்பட்டது. அதில் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications